இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று ஐ.தே.கவின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனுராதபுர- திறப்பனவில், நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

‘எதிர்வரும் தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ரஜரட்டை மக்களின் ஆதரவு தேவை.

நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஆதரவும் எனக்கு உறுதி செய்யப்பட்டால், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், நாட்டிற்கு ஒரு புதிய யுகத்தை உருவாக்க தயாராக இருக்கிறேன்.’ என்றும் அவர் தெரிவித்தார்.