ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும்- தரன்ஜித் சிங் சந்து

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான இலங்கையின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போதே அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

‘இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை, இந்தியா தனக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே கருதுகிறது.

ஜிகாதி தீவிரவாதம் உலகத்துக்கான பொது அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான இலங்கையின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.