டுவிட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் டுவிட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் டுவிட்களை முறைப்பாடு அளிக்கும் போது புதிய மெனு திறக்கும். இதில் பயனர்கள் டுவிட் பற்றி அதிகளவு விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பிரச்சனையை விரிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தப் புதிய வசதியை டுவிட்டர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய டுவிட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர் எதிர்கொள்ளும் டுவிட்கள் பற்றி அதிகளவு விவரங்களைத் தெரிவிக்க முடியும்.

இத்துடன் ரிப்போர்ட்(report) பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெரிவிக்க முடியும். முன்னதாக பயனர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க டுவிட்டர் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இவற்றில் பலரது குற்றச்சாட்டுகள் டாக்சிங் ஆகும். டாக்சிங் என்பது ஒருவரின் அனுமதியின்றி அவரது விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தாகும். இது ஒன்லைன் மற்றும் ஒப்லைனில் தீங்கு ஏற்படுத்த காரணமாக அமையும்.

டுவிட்டரில் கருத்து சுதந்திரம் மற்றும் கேலி கிண்டல்களை வித்தியாசப்படுத்துவதில் டுவிட்டர் சிரமப்படுகிறது. அந்த வகையில் புதிய அம்சம் மூலம் அவற்றை எதிர்கொள்ள டுவிட்டர் முயன்று வருகிறமை குறிப்பிடத்தக்கது