பிக்பொஸ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ‘டொஸ்’ போடுவதற்கு நாணயத்துக்கு பதிலாக துடுப்பாட்ட மட்டையைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான துடுப்பாட்ட மட்டை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை சார்பில் நடத்தப்படும் பிக்பொஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 8ஆவது சீசன் வருகிற 19ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் புதிய முறை ஒன்று புகுத்தப்படுகிறது. வழக்கமாக யார் முதலில் துடுப்பாட்டம் அல்லது பந்து வீச்சைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய, நாணயத்தை மேலே சுண்டி விட்டு (டொஸ்), பூவா-தலையா கேட்பார்கள். இதை சரியாக சொல்லும் அணியின் கப்டன் துடுப்பாட்டம்-பந்து வீச்சை தீர்மானிப்பார்.

ஆனால் இந்த தொடரில் நாணயத்தை வைத்து ‘டொஸ்’ போடுதல் நீக்கப்பட்டு, துடுப்பாட்ட மட்டையை மேலே தூக்கி போட்டு முடிவு செய்ய இருக்கிறார்கள். அதாவது துடுப்பாட்ட மட்டையின் அடிப்பாகம் மற்றும் மேல்பாகம் இவற்றில் எது முதலில் தரையில் படுகிறதோ அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இதற்காக பிரத்யேகமான துடுப்பாட்ட மட்டை தயாரிக்கப்பட்டு இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது