தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வழக்கமாக இரண்டு அல்லது மூன்று விருதுகளாவது தமிழ் படங்களுக்குக் கிடைக்கும். இந்த முறை ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை.

சிறந்த தமிழ் படத்திற்காக யாரும் கேள்வியே படாத பாரம் என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை விருது பெற்றாலும். அது தெலுங்கு மகாநடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கே.ஜி.எப் படம் 3 விருதுகளை பெற்றாலும் அது கன்னடப் படமே.

கதிர் நடித்த பரியேறும் பெருமாள், லெனின் பாரதி இயக்கிய மேற்கு தொடர்ச்சி மலை படங்களுக்கு ஏதாவது ஒரு பிரிவில் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல வடசென்னை படத்தில் நடித்த தனுஷ்,  ‛96′ விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோருக்கு விருது கிடைக்கும். சர்வம் தாள மயம் படத்திற்காக ரஹ்மானுக்கு விருது எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது’ என்கிறார், ஒரு பிரபல தயாரிப்பாளர்.