திருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு  அமெரிக்காவுக்கு,  அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், விமல் வீரவன்ச இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, “இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது அமைச்சின் கீழ் இந்த விடயம் இல்லை.

இது பாதுகாப்பு அமைச்சுக்கு உட்பட்ட விவகாரம், பாதுகாப்பு அமைச்சிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பதிலளித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சராக சிறிலங்கா அதிபரே பதவியில் இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.