திருநங்கைகளால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியுமா என்ற கேள்வி நம்முடைய மனதில் எழுவதே இல்லை. ஏனென்றால் அது முடியாது என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. திருநங்கைகளாலும் பாலூட்ட முடியும் என நிரூபித்து, அதன்மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை என்று தன்னை ஆவணப்படுத்தியிருக்கிறார் 30 வயது திருநங்கை ஒருவர்.

இவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. வாடகைத் தாய் முறையில் பெற முடியும். அதேபோல ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் அறுவை சிகிச்சை எதுவுமு் இன்றி வாழ்க்கை முறையை மட்டும் மாற்றிக் கொண்டிருந்தால் இது சாத்தியம் தான் என்கிறார்கள்.

சாதித்த திருநங்கை
அவள் ஒரு திருநங்கை. அவளுக்கு வயது 30. அவள் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என விரும்பினாள். இவளுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால் தன்னுடைய குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் திட்டமும், தாய்ப்பால் சுரப்பும் அவளுக்கு இல்லை என்பதால் திருநங்கையான இவள் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க நினைப்பதாகவும் கூறினாள். எக்காரணம் கொண்டும் தன்னுடைய குழந்தைக்கு தான் புட்டிப்பால் கொடுக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு இருந்தாள் அவள். இதற்காக எந்த ஒரு ரிஸ்க் எடுக்கவும் தான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினாள்.

தாய்ப்பால் கொடுக்கும் முயற்சி
சரி, இந்த முயற்சியை செய்து பார்த்துவிடுவோம் என்று முடிவெடுத்த பின், வைத்தியர்கள் அவளுக்கு சிகிச்சை அளிக்க ஒத்துக் கொண்டனர். ஹார்மோன் சிகிச்சையை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்தனர் மருத்துவர்கள். கடந்த வருடம் தொடர்ச்சியான ஹார்மோன் சிகிச்சை கொடுக்கப்பட்டதன் பலனாக அவள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தாள். இதன் மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை என்று இவருடைய வழக்கு ஆவணப்படுத்தபட்டது. இதனை சென்ற மாதம் ட்ரான்ஸ்ஜெண்டர் ஹெல்த் என்ற பத்திரிகை வெளியிட்டு அவளை பெருமைப்படுத்தியது.

ஹார்மோன் தூண்டல்
“எங்களிடம் குழந்தைபேறு பிரச்சனைக்காக வரும் நோயாளிகளிடம் முழு அளவிலான இனப்பெருக்க தேர்வுகளை வழங்க விரும்புகிறோம். இதற்கான ஒரு அடுத்தக்கட்ட படியாக இந்த வழக்கு உள்ளது” என்று டால்மர் ரைஸ்மான், ஜில் கோல்ட்ஸ்டைனுடன் சேர்ந்து இந்த ஆய்வை எழுதியவர் தி வாஷிங்டன் போஸ்ட்டுடன் தொலைபேசி பேட்டியில் தெரிவித்தார். இதை அவர் தாங்கள் மருத்துவ உலகில் எங்கள் துறையில் சாதனையின் ஒரு மைல் கல்லை தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் டிரான்ஸ்ஜெண்டர் மெடிக்கல் மற்றும் அறுவை சிகிச்சை மையம் உள்ளது. அங்கு உள்ள ஒரு உட்சுரப்பியல் (ஹார்மோன்) நிபுணர் ரெய்ஸ்மேன். இவர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தாய்மார்கள் தூண்டல் முறையில் தாய்ப்பால் சுரக்க வைப்பதை நெறிமுறைப்படி செய்து வருகிறார்.

பால் சுரப்பு மருந்து
பாலின மறுசீரமைப்பு செய்து கொள்ளாத நோயாளிகளுக்கு சில ஹார்மோன் சிகிச்சை வழங்கப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்க ஸ்பைரோனோலக்டோன், கர்ப்பத்தின் ஹார்மோன் நிலைமையைப் பிரதிபலிக்கும் எஸ்ட்ராடியோல் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்றவை செலுத்தப்படுகின்றன. நோயாளிக்கு பால்சுரப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. பால் உற்பத்திக்கு உதவும் ஒரு ஹார்மோன், ப்ரோலக்டின். இதனை அதிகரிக்க மார்பக பம்ப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். இந்த சிகிச்சை தொடங்கி ஒரு மாதத்திற்கு பிறகு அவளால் சில துளி பால் உற்பத்தி செய்ய முடிந்தது. அடுத்த 3 மாதங்களில் ஒரு நாளைக்கு 8 அவுன்ஸ் பால் உற்பத்தி இருந்தது அவளிடம். இது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

அழகான குழந்தை
குழந்தை பிறந்த பிறகு, முதல் ஆறு வாரங்களுக்கு நோயாளி தாய்ப்பால் ஊட்டினார் மற்றும் அந்த நேரத்தில், குழந்தை நல மருத்துவர் “குழந்தையின் வளர்ச்சி, உணவு, ஆகியவை வளர்ச்சிக்கு ஏற்றதாக இருந்தன” என்று கூறியதாக அந்த ஆய்வு தெரிவித்தது. அதன் பின் அவளால் குழந்தைக்கு போதுமான அளவு பால் உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதால் தாய்ப்பாலுடன் சேர்த்து பவுடர் பாலும் கொடுக்கத் தொடங்கினாள் என்றும் கூறப்படுகிறது. ஆறு மாதத்தில் அந்த குழந்தை ஆரோக்கியமாக சந்தோஷமாக மிகவும் அழகாக இருந்ததாக இந்த ஆய்வின் துணை எழுத்தாளர் ரெய்ஸ்மேன் கூறுகிறார்.

தாய்ப்பால் அவசியம்
பல்வேறு காரணங்களுக்காக, அமெரிக்க மருத்துவ அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், எந்த ஒரு மருத்துவ காரணமும் இல்லாத ஒரு சூழலில், குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது, பின்னர் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது திட உணவுகளுடன் கூடுதலாக தாய்ப்பால் கொடுக்குபடி அறிவுறுத்தப்படுகிறது..

பாலூட்டும் உணர்வு
சொந்தமாக தாய்ப்பால் உற்பத்தி செய்ய முடியாத தாய்மார்கள் அல்லது குழந்தைகளை தத்து எடுத்த தாய்மார்கள், போன்றவர்களுக்கு ஹார்மோன் மற்றும் பாலூட்டல் உணர்வை தூண்டுவதற்கான நெறிமுறைகள் உள்ளன. “பாலூட்டலை தூண்டுவதற்கான நெறிமுறை மிகவும் பொதுவானது” என்று அமெரிக்க மருத்துவ அகாடமியின் செய்தித் தொடர்பாளர் ஜென்னி தாமஸ் ஒரு தொலைபேசி பேட்டியில் தெரிவித்தார்.

தாய்ப்பால் உற்பத்தி சிகிச்சை
மேலே கூறப்பட்ட வழக்கிலும் இந்த முறைதான் அதாவது தாய்ப்பால் உற்பத்தி செய்ய முடியாத தாய்மார்களுக்கு இவர்கள் வழங்கும் சிகிச்சை தான் பின்பற்றப்படுள்ளதாக விஸ்கான்ஸில் உள்ள அரோரா ஹெல்த் கேருக்கான ஒரு குழந்தை நல மருத்துவர் மருத்துவர் மற்றும் பாலூட்டக்கூடிய ஆலோசகர் தாமஸ், கூறியுள்ளார். ஆனால் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தடுக்க ஸ்பைரோனோலக்டோன் பயன்படுத்தியது மட்டுமே இதில் உள்ள ஒரு சிறு மாறுபாடு என்றும் அவர் கூறுகிறார். தாய்ப்பால் கொடுக்கும்போது ச்பைரோனோலக்டோன் பயன்படுத்த ஏற்றதாகக் கருதப்படுகிறது என்று லக்டோமெட் என்ற தேசிய சுகாதார நிறுவனத்தின் தேசிய மருத்துவ நூலக ஆன்லைன் தரவு கூறுகிறது. ஆனால் நாங்கள் இந்த ச்பைரோனோலக்டோன் தாய்ப்பாலில் சேருவதை ஏற்பதில்லை என்று தாமஸ் கூறுகிறார். ஆனால் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பள்ளியில் ஒரு டாக்டர் மற்றும் இணை பேராசிரியராக இருந்த மேட்டலின் டெய்ச், இது பற்றிய போதுமான ஆராய்ச்சி இல்லை என்று கூறினார். அவர் தான் ஒரு 6 மாத குழந்தை கொண்ட ஒரு திருநங்கை பெண் என்றும் கூறினார். அவர் திருநங்கை தாய்மார்களை சமாதானப்படுத்த முடியும் என்று கூறினார், ஆனால் பாலூட்டலைத் தூண்டுவதற்கு முயற்சி செய்வது “நான் செய்ய வேண்டிய ஒன்று அல்ல,”

ஊட்டச்சத்துக்கள்
பல்வேறு மருந்துகள் ஒரு சிசு அல்லது ஒரு குழந்தைக்கு மாற்றப்பட முடியுமா என்பது மட்டுமல்ல, திருநங்கைகளால் தயாரிக்கப்பட்ட மார்பகப் பால் சரியான ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதா என்பது கேள்விக்குறியே என்று அவர் கூறுகிறார். “அந்த தாய்ப்பாலில் ஊட்டச்சத்து குறித்த கேள்விகளுக்கு இந்த தருணத்தில் பதில் இல்லை” என்றும் அவர் கூறுகிறார். “இதற்காக திருநங்கைகள் தங்கள் உடலை பாதுகாப்பதில்லை என்று பொருள் இல்லை, இதனைப் பற்றிய இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவை என்று மட்டும் தான் நான் கூறுகிறேன்” என்று அவர் கூருகிறார் குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது மிகவும் நல்ல விஷயம். பெற்றோரில் ஒருவரால் அது முடியாதபோது, மற்றவர் செய்வது என்பது ஆகச் சிறந்த ஒன்று என்று தாமஸ் கூறுகிறார்.