திருமணமான மூன்றாவது நிமிடத்தில் விவாகரத்து; அதிர வைக்கும் காரணம்

விவாகரத்து பெறுவதற்கு பல காரணங்கள் உண்டு. சிலருக்கு திருமணம் ஆன அன்றே கூட விவாகரத்திற்கான காரணம் தோன்றும். உணவு விருப்பம், தம்பதியினருக்கு கொடுக்கும் பரிசுப் பொருட்கள் என்று எந்த ஒரு காரணமும் அவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிவதற்கு காரணமாக இருக்க முடியும்

திருமணம் முடிந்து அடுத்த 3 நிமிடங்களில் கணவனை விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஒரு பெண் பற்றிய வழக்கும் இது போன்ற ஒரு விசித்திர வழக்காகும். வாருங்கள் அதன் காரணத்தை அறிந்து கொள்வோம்..

இந்த விசித்திர சம்பவம் குவைத்தில் நிகழ்ந்துள்ளது. திருமண பதிவை முடித்த தம்பதியினர் அந்த நீதிமன்றத்தில் இருந்து வெளிவரும் முன்பே அவர்களின் திருமணம் முறிந்தது. சில நிமிடங்கள் முன்னர் நீதிபதி முன்னிலையில் ஒரு திருமண ஜோடி திருமண பதிவில் கையெழுத்திட்டனர்.

நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த திருமண ஜோடி நடந்து வரும் வேளையில் மணப்பெண் கால் தவறி கீழே விழுந்து விட்டார். அவரை தூக்கிவிட்டு உதவி புரியாமல், கீழே விழுந்தத்தை சுட்டிக் காட்டி அவர் கணவர் தன் மனைவியாகிய புது மணப்பெண்ணை அனைவர் மத்தியிலும் “ஸ்டுபிட்” என்று கூறி அவமானப்படுத்தியுள்ளார்.

இந்த அவமானத்தை சற்றும் எதிர்பார்க்காத புது மணப்பெண் உடனடியாக நீதிபதியை அணுகி தனது திருமணத்தை தள்ளுபடி செய்ய கோரியுள்ளார். தனது விவாகரத்திற்கு தான் அவமானப்பட்டது தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கு திருமணம் முடிந்து 3 நிமிடங்கள் மட்டுமே ஆகி இருந்தது தான் கொடுமை..

நெட்டிசன்களுக்கு இந்த சம்பவம் குறித்து, அந்த பெண் செய்தது சரி என்றும் தவறு என்றும் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. சிலர் அந்தப் பெண் செய்தது சரியான காரியம் என்று புகழும் ஒரு பக்கத்தில் அந்தப் பெண் அவள் கணவரை விவாகரத்து செய்வதற்கு காரணம் தேடி இருக்கலாம், அதனால் இது நிகழ்ந்தது என்று மறு பக்கத்திலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.