உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே,  பிரதமரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா என்பது உள்ளிட்ட  அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுக்கும் என்று என கட்சிப் பேச்சாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்குப்  பொருத்தமான ஒருவரைத் தீர்மானிப்பதாக, இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்த, ஐக்கிய தேசிய முன்னணி தயாராகி வருகிறது என வெளியான தகவல்கள் குறித்தே அவர், இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த பின்னரே,  அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுக்கும்.

பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றால், நாங்கள் எமது அடுத்த நடவடிக்கை பற்றி குறிப்பாக சிந்திக்க வேண்டும், ” என்றும் அவர் கூறினார்.