சாவகச்சேரியில் நேற்று முன்தினம் நான்கரை கிலோ கஞ்சாவுடன் சிக்கிய முஸ்லிம் நபரிற்காக நேற்று சட்டத்தரணி கேசவன் சயந்தன் முன்னிலையானார்.

சாவகச்சேரி விடுதியொன்றில் இருந்து கஞ்சா கடத்திக் கொண்டு தெற்கிற்கு செல்லவிருந்த நிலையில், வாகனத்துடன் நேற்று கஞ்சா மீட்கப்பட்டிருந்தது. சாகவகச்சேரி தபால்நிலைய வீதியிலுள்ள விடுதியில் வைத்து வாகனத்தை, இராணுவ புலனாய்வுத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். அதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

நீண்டகாலமாக நடக்கும் கஞ்சா கடத்தலை முறியடிக்க, இராணுவ புலனாய்வுத்துறையினர் பகீரதப் பிரயத்தனம் செய்தனர் எனத் தெரிகிறது.

தென்மராட்சியில் இறைச்சி விற்பனையில் ஈடுபடும் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் தம்பியும் இதில் கைதாகியிருந்தார். கைதானவர், தான் தாக்கப்பட்டேன் எனக் குறிப்பிட்ட பின்னர் தற்போது வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், வைத்தியசாலையில் வைத்தே அவர்களை பிணையில் விடுவிக்க முயற்சி நடப்பதாகவும், தென்மராட்சியின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகரான சட்டத்தரணியொருவர் அந்த முயற்சியில் ஈடுபடுவதையும் சற்று முன்னர் வெளியிட்டிருந்தோம்.

நேற்று இரவு 9 மணியளவில், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை பார்வையிட்டார். இதன்போது, தமிழ் அரசு கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவர் கே.சயந்தன், கஞ்சா கடத்தலில் கைதாகியுள்ள ரிசாட் சார்பில் முன்னிலையாகியிருந்தார்.