தமிழர்களில் திருநாளான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தென்மராட்சி – அல்லாரை டெல்ரா கழகம் மற்றும் ரொட்டரி கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நேற்று (12) ஆரம்பமாகியுள்ளன.

தென்மராட்சி கழகங்களுக்கு இடையில் இப் போட்டிகள் நடாத்தப்படகின்றன. நொக்கவுட் முறையில், மின்னொளியில் இக் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

இப் போட்டியில் தென்மராட்சியைச் சேர்ந்த நாவற்குழி சித்திவிநாயகர் அணி, மட்டுவில் வளர்மதி,நாவற்குழி காந்தி அணி, கதிர்ஒளி-A மற்றும் கதிர்ஒளி-B ,சீமா,வொலிகிங்ஸ்,மட்டுவில் மோகனதாஸ்,அம்பாள், தனங்கிளப்பபு சிறீ கணேசா, டெல்ரா,கைதடி வளர்மதி ஆகிய 12 அணிகள் பங்குகொள்கின்றன.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் நாவற்குழி சித்தி விநாயகர் அணியை எதிர்த்து மட்டுவில் வளர்மதி ஆடியது.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இச் சுற்றில் 2:1 என்ற கணக்கில் நாவற்குழி சித்தி விநாயகர் அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நாவற்குழி காந்தியை எதிர்த்து மட்டுவில் கதிர்ஒளி- A  அணி மோதியது. இப் போட்டியில் 2;:0 என்ற கணக்கில் கதிர்ஒளி- A அணி வெற்றிபெற்றது.

அத்துடன் கதிர் ஒளி-டீ மட்டுவில் மோகனதாஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற இருந்த போட்டி கதிர் ஒளி-டீ அணி குறிப்பிட்ட நேரத்துக்கு சமூகமளிக்காததால் மட்டுவில் மோகனதாஸ் அணி வெற்;றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்றும் போட்டிகள் இடம்பெற்றன.

இன்று இடம்பெற்ற போட்டிகளில் தனங்கிளப்பு சிறீகணேசாவை எதிர்த்து அம்பாள் அணி மோதியது. இப் போட்டியில் 2:0 என்ற செற் கணக்கில் அம்பாள் அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து வொலிகிங்ஸ் அணியை எதிர்த்து சீமா அணி மோதியது. இதில் 2;:0 என்ற செற் கணக்கில் வொலிகிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

நாளைய போட்டிகளில், டெல்ரா எதிர் கைதடி வளர்மதி, மோகனதாஸ் எதிர் அம்பாள்,நாவற்குழி காந்தி எதிர் நாவற்குழி சித்தி விநாயகர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

தைப்பொங்கல் தினம் அன்று இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.