இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவண் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் அண்மையில் பதவிவிலக்கப்பட்டதையடுத்து, அந்த பதவிக்கு மேஜர் ஜெனரல் ருவண் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.