தேனிலவு புகைப்படங்கள் வைரலான பிறகு வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. என்ன ராக்கி, திருமணமாகிவிட்டதா என்று கேட்டதற்கு அதெல்லாம் இல்லை. போட்டோஷூட்டுக்காக மணக்கோலத்தில் போஸ் கொடுத்தேன், நான் இன்னும் சிங்கிளாகவே உள்ளேன் என்றார்.

இதையடுத்து அவரின் தேனிலவு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. தேனிலவு புகைப்படங்கள் வெளியான பிறகும் நான் சிங்கிள் தான் என்று சொல்லப் போகிறீர்களா ராக்கி என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் பயந்துவிட்டேன், அதனால் உண்மையை கூறவில்லை. ஆம், எனக்கு திருமணமாகிவிட்டது. இந்த செய்தியை நான் உறுதி செய்கிறேன் என்றார்.

தொழில் அதிபர் என் கணவரின் பெயர் ரித்தேஷ். அவர் இங்கிலாந்தில் தொழில் அதிபராக உள்ளார். திருமணம் முடிந்த பிறகு அவர் இங்கிலாந்திற்கு சென்றுவிட்டார். என் விசா வேலைகள் முடிந்த உடன் நானும் கிளம்பிவிடுவேன்.

திருமணத்திற்கு பிறகும் நான் படங்களில் நடிப்பேன். டிவி நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது தற்போது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

ஜே.டபுள்யூ. மேரியட் ஹோட்டலில் நடந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்டதற்கு எனக்கு திருமணமாகிவிட்டது என்று பேசுகிறார்கள். எனக்கு திருமணமாகவில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறிய கையோடு ரகசிய திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் ராக்கி என்பது குறிப்பிட்டத்தக்கது.