தை மாதத்தை ,பன்முகத்தன்மைக்கு உதாரணமான தமிழர்களின் மாதமாக பிரகடணம் செய்யுங்கள் – ரொரண்டோ நகர மேஜர்

தை மாதத்தைத் தமிழர் மாதமாகப் பிரகடனப்படுத்தவேண்டும் என கனடா ரொரண்டோ நகர மேஜர் ஜோன் ரொறி கோரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்தவை வருமாறு,

நான் தமிழ் மக்களை வரவேற்கின்றேன் இந்தத் தை மாதம் நல்ல மாதமாக அமைய வாழ்த்துகின்றேன்.

ரொரண்டோ நகரில் வாழும் தமிழ் மக்களின்; பன்முகத்தன்மையை நான் மதிக்கின்றேன்.

தமிழ் மக்களின் பன்முகத்தன்மை உலக மக்களுக்கே உதாரணமாக எடுக்ககூடிய அளவு இருக்கின்றது. அவர்கள் கொண்டாடும் தமிழ் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் தை மாதத்தில் வருவதால் அம் மாதத்தை தமிழர்களின் மாதமாகக் அறிவிப்பதில் ரொரண்டோ மேஜராக நான் பெருமைப்படுகின்றேன்.

சிறந்த அடைவு மட்டமாகவும் நாங்கள் உணருகின்றோம். இங்குள்ள தமிழ் மக்கள் எங்களை வளர்த்தார்கள், நாங்கள் அவர்களை வளர்க்கின்றோம்.

இது இலங்கையின் தமிழர் பிரதேசமான வடக்கு கிழக்கு அதிலும் முக்கியமாக யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் சமரசத்தை ஏற்படுத்த உதவும். இங்கு மட்டுமல்ல உலகநாடுகளில் எல்லா இடமும் தை தை மாதத்தைத் தமிழர் ஆண்டாகப் பிரகடனப்படுத்துங்கள்- என்று தெரிவித்துள்ளார்.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது