தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்ட பாடசாலை, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பாடசாலை, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.