யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுள்ளார்.

ஆலயத்திற்கு சென்ற அவர், விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்தோடு, நல்லூர்க்கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

இதன்போது இராணுவத்தளபதியுடன் யாழ். மாவட்ட இராணுவ தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டனர். இரானுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.