பால்ய நாட்களைக் கடந்த நம்மில் பலர், நாக்கால் மூக்கைத் தொட முயன்றிருப்போம். தீவிர முயற்சியால் அதில் வெகுசிலர் வெற்றியும் அடைந்திருப்போம். மேலும் சிலர் விளையாட்டாக நாக்கைக் கையால் இழுத்து மூக்கைத் தொட வைத்ததுண்டு.

ஆனால் நேபாளத்தைச் சேர்ந்த யக்யா பகதூர் கதுவால், தனது நாக்கால் மூக்கைத் தொட்டு, அத்துடன் முன் நெற்றியையும் தொடுகிறார்.

தன்னுடைய திறமையைக் கொண்டு மற்றவர்களை மகிழ்விக்க முடிவெடுத்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு முறை தான் நாக்கால் நெற்றியைத் தொடும்போதும் குழந்தைகள் அதைக் கண்டு பயப்படுகின்றனர் எனவும் அதில் சிலர் ஆடையிலேயே சிறுநீர் கழித்ததுள்ளனர் எனவும் சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

அத்துடன் பெரியவர் ஒருவர் தன்னுடைய செய்கையைக் கண்டு அதிர்ச்சியில் உயிரையே விட்டுள்ளார் எனவும் பகதூர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார். உலகிலேயே தன்னுடைய நாக்குதான் மிகவும் நீளமானது என்று கூறும் பகதூர், பாடசாலையில் சாரதியாகப்; பணிபுரிகிறார்.

‘அங்கு தனது வித்தையைக் காண்பித்தால் வேலை போய்விடும் என்பதால், வேலையை மட்டுமே பார்ப்பேன்’ என்கிறார் கதுவால்.