இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளார், என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற பதிவேட்டுப் பிரிவில் பணியாற்றிய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினரான, மொகமட் நௌசட் ஜலால்தீனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் மற்றொரு சந்தேக நபர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.