இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ரணில்விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள, சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாட்டின் இறைமையை உறுதி செய்யும் விதத்தில் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ள நாமல் ராஜபக்ஸ,

‘அரசியலுக்கு அப்பால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில்விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தற்போதாவது ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இறைமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கின்றேன்.

மேற்குலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பார் என்று நம்புகிறேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.