நான் விளையாடியிருந்தால் இந்தியா அணி ஜெயித்திருக்கும் – அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்

நேற்று நடைபெற்ற உலகக்கிண்ணக் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணியின் டோனி, ஜடேஜா வெற்றியின் விளிம்பு வரை போட்டியை கொண்டு வந்தாலும் கடைசி நேரத்தில் இருவரது விக்கெட்டுக்களும் விழுந்ததே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தது

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்திய அணி தோல்வி அடைந்தாலும், வெற்றிக்காக கடுமையாக போராடியதை அவர்கள் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயகுமார், ‘மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. சிறுதோல்வியை சந்தித்தது போல் இந்திய கிரிக்கெட் அணியும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், இந்திய அணியும், அ.தி.மு.வும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் நான் விளையாடி இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வென்றிருக்கும் என்றும் அமைச்சர் கொமெடியாக தெரிவித்தார். ஏற்கனவே சமீபத்தில் நடந்த ஒரு விழாவின்போது ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது