நாம் நினைத்தாலே செய்துமுடிக்கும் பேஸ்புக்…!

ஒருபுறம் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிவரும் பேஸ்புக் நிறுவனம் மறுபுறம் பல புதிய வசதிகளையும் அறிமுகம் செய்துவருகிறது. உதாராணத்திற்கு சில மாதங்களுக்குமுன் ‘வோச் வீடியோ டூகெதர்’ எனும் வசதியை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிதாக பேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எண்ணங்களுக்கு ஏற்றவாறு அவர்களின் பேஸ்புக் கணக்கு செயல்படும் வகையில் புதிய வசதியை உருவாக்குவதில் ஈடுபட்டுவருகிறது.

இது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டே அந்நிறுவனம் பேசியுள்ளது. தற்போது அதன் செயல் வடிவத்தில் இறங்கியுள்ளது. இது பயன்பாட்டிற்கு வரும்போது, வாடிக்கையாளரகள் தங்களின் பேஸ்புக் கணக்குகளை இயக்குவதற்கு கைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

மாறாக அவர்களின் எண்ணோட்டம் எப்படி இருக்கிறதோ, அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறார்களோ அதன் அடிப்படையில் அவர்களின் கணக்கு செயல்படும்.

இந்த வசதி எப்போது செயல்பாட்டிற்கு வருமென தெளிவாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிடவில்லை. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தில் இந்த வசதி விரைவில் வருமென எதிர்பார்க்கலாம்.