நாற்பது நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சம்சுங். எந்த போன் என்று பாருங்க!

சம்சுங் நிறுவனம் மார்ச் 1 ஆம் தேதி முதல் இதுவரை மட்டும் சுமார் 20 லட்சம் கலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் சுமார் ரூ.3,482 கோடிகளை வருவாயாக ஈட்டியிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் சம்சுங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் இருந்து ரூ.27,700 கோடிகளை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

முன்னதாக சம்சுங் நிறுவனம் கலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.12,490 விலையில் அறிமுகம் செய்தது. இது சம்சுங் நிறுவனத்தின் நான்காவது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருந்தது.

மார்ச் மாதத்தில் சம்சுங் கேலக்ஸி ஏ10 ரூ.8,490 விலையிலும், கலக்ஸி ஏ30 ரூ.16,990 விலையிலும், கலக்ஸி ஏ50 ரூ.19,990 மற்றும் ரூ.22,990 விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

மார்ச் 1 ஆம் தேதி துவங்கி சரியாக 40 நாட்களில் மொத்தம் 20 லட்சம் கலக்ஸி ஏ மொடல்கள் – கலக்ஸி ஏ50, கலக்ஸி ஏ30 மற்றும் கலக்ஸி ஏ10 உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது. இவற்றின் மூலம் மொத்தம் ரூ.3,482 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என சம்சுங் இந்தியா மூத்த துணை தலைவர் ராஞ்சிவ்ஜித் சிங் தெரிவித்தார்.

கலக்ஸி ஏ சீரிஸ் மற்ற மாடல்கள் விற்பனைக்கு வரும் போது எங்களது இலக்கை அடைவோம் என அவர் மேலும் தெரிவித்தார். கலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்சுங் நிறுவனம் விரைவில் கலக்ஸி ஏ70 மற்றும் கலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.25,000 – ரூ.30,000 என்றும் ரூ.45,000 – ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என சிங் தெரிவித்தார்.