வலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரையை ஒத்த பௌத்த பீடக் கட்டடமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 28 வருடங்களுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பகுதிகளில் சில இடங்கள் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து , விடுவிக்கப்பட்டு வருகின்றன.

அந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதிதாக விகாரையை ஒத்த கட்டடம் ஒன்றை அமைக்கும் பணியினை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

நாவற்குழி பகுதியில் பல எதிர்ப்புக்களின் மத்தியில் கட்டப்பட்ட விகாரை நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.