நேசமணி ட்ரென்டிங் வடிவேல் கூறியது என்ன?

நேசமணி போன்ற கேரக்டர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் தனக்கு அளித்த பரிசு என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவின் படங்கள் ஒன்றும் தற்போது ரீலிஸ் ஆகவில்லைதான். ஆனால் என்றுமே சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வடிவத்தில் இடம்பெற்றிருப்பார் வடிவேலு. அதற்கு காரணம் ரசிகர்களிடையே அவர் ஏற்படுத்தி சென்றிருக்கிற தாக்கம்தான். கொடுக்கப்பட்ட கேரக்டரில் கச்சிதமாக நடித்து ரசிகர்களை தம்பக்கம் இழுக்க வல்லவர்.

நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் உலக அளவில் ட்ரெண்ட் அடிக்கிறது ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தின் நேசமணி கேரக்டர். இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நேசமணி தலையில் விழுந்தது என ஒரு நெட்டிசன் பதிலளித்துள்ளார். இதன்மூலம் வடிவேலு மீண்டும் சமூகவலைதளங்கள் சுற்றிவர ஆரம்பித்திருக்கிறார்.

இந்நிலையில் நேசமணி போன்ற கேரக்டர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் தனக்கு அளித்த பரிசு என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.