பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும் தமது பதவிகளை விலகுவதற்கான அறிவிப்பை ஜனாதிபதிக்கு
அனுப்பவுள்ளனர்.

உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 359 பேர்வரை
உயிரிழந்தனர். தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலரும் பொலிஸ் மா அதிபரும் பொறுப்புக் கூறவேண்டும் என்று ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலர் மற்றும் பொலிஸ் மா அதிபர் இருவரும் பதவி விலகல் கடிதத்தை வழங்கவேண்டும் என்று ஜனாதிபதியால் கோரப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஏற்கனவே தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.