பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அமெரிக்கா துணை நிற்கும் – அலிஸ் வெல்ஸ்

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்காளர்களுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு வந்த அலிஸ் வெல்ஸ், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்று குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னரே இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, நேற்று முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசிய அலிஸ் வெல்ஸ் இன்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவையும் சந்திக்கவுள்ளார்.

எனினும், மைத்திரியை அவர் சந்திப்பதற்கான நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.