பருத்தித்துறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபர் : பொலிஸ் விடயம் என அம்புலன்ஸ் அனுப்ப மறுத்த மந்திகை ஆதார வைத்தியசாலை

பருத்தித்துறை மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தவறான முடிவுக்கு முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (13) காலை 08 மணியளவில் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை கொற்றாவத்தையைச் சேர்ந்த விஜயகாந்த் (வயது -40) என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீமூட்டி உயிரை மாய்க்க முயற்சித்தார்.

‘அவர் நேற்றைய தினம் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று, அருகிலுள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்தில்
மண்ணெண்யென் எடுத்து ஊற்றி தனக்குத்தானே தீ மூட்டினார்.

அவர் எரிந்த தகவல், சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு தெரிவிக்கப்பட்டபோதும், இது பொலிஸ் விசாரணைக்குரிய விடயம் என கூறி மந்திகை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் அவசர நோயாளர் காவு வண்டியை அனுப்ப மறுத்து விட்டது. பின்னர் 119 அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு மாற்றப்பட்டபோது, அங்கு நோயாளர் காவு வண்டி நிற்கவில்லை. பின்னர், நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு மாற்றப்பட்டு, அங்கிருந்தே நோயாளர் காவு வண்டி வந்து, அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.