பருத்தித்துறை கடற்கரையில் 114 கிலோ கிராம் கஞ்சா  மீட்பு

114 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதி ஒன்றை பருத்தித்துறை கடற்கரையிலிருந்து கடற்படையினர் மீட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் அந்தப் பொதியை அந்தப் பகுதிக்கு எடுத்து வந்தவர்கள் யார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அந்தப்பகுதிக்கு இன்று சென்ற கடற்படையினர் கஞ்சா போதை பொருள் பொதியை மீட்டனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளை கடற்படையினர் பருத்தித்துறை பொலிஸாடம் ஒப்படைத்தனர். அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்