பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபிராமியால், அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது எனக்கூறப்படுகிறது

நேர் கொண்ட பார்வை’ படத்தின் மூன்று முக்கிய பெண் பாத்திரிங்களில் ஒன்றில் நடித்துள்ள அபிராமி வெங்கடாச்சலம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவர் என்ற செய்தி வெளியானவுடன் அஜித் ரசிகர்கள் அவருக்கு பெரும் ஆதரவு கொடுத்தனர்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவருடைய முதிர்ச்சியில்லாத செய்கையால் தற்போது அவருக்கு நெக்கட்டிவ் இமேஜ் ஏற்பட்டுள்ளது. முதலில் மதுமிதாவை குறைகூறி வனிதா குரூப்பில் சேர்ந்த அபிராமி, பின்னர் வனிதாவிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தற்போது தனியாக உள்ளார்.

கவினுடன் காதல், அந்த காதல் தோல்வியால் முகினுடன் காதல், யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பிரச்சனையில் சிக்குவது என தொடர்ச்சியாக கெட்ட பெயர் வாங்கி வருகிறார் அபிராமி. இந்த வாரம் அவர் கப்டனாக தேர்வு செய்யப்பட்டும் அவருடைய தலைமைப்பண்பு ஆளுமையில்லாமல் இருப்பதாகவே கருதப்படுகிறது

இதன் காரணமாக தற்போது அஜித் ரசிகர்கள் உள்பட பலர் அபிராமிக்கு நெக்கட்டிவ் கொமெண்ட் அளிக்க தொடங்கிவிட்டனர். இதன் பாதிப்பு ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வெளியீட்டின் போதும் இருக்குமா? என்றும் கருதப்படுகிறது

இதேபோல் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின்போது ரைசா வில்சன் நெகட்டிவ் பெயர் வாங்கியதால் தனுஷின் ‘விஐபி 2’ படத்தில் அவரது காட்சிகளில் சில நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது