பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் செகண்ட் இன்னிங்ஸ்- மீண்டும் பிரளயமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு வாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர் வனிதா. இவர் இருந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட அனைவரிடமும் சண்டை போட்டுவிட்டார். அனைவருக்கும் தண்ணி காட்டிய மீராமிதுன் கூட வனிதாவிடம் சண்டை போட்டு ஜெயிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அடங்கித்தான் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே முதல் வாரம் கேப்டனாக இருந்த வனிதா, இரண்டாவது வாரமே நாமினேஷனில் சிக்கி வீட்டை விட்டும் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறிய பின்னர் பிக்பாஸ் வீட்டில் பாதி அமைதி திரும்பியது.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து சாக்சி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் இன்று சிறப்பு விருந்தினராக வனிதா வீட்டிற்குள் நுழைகிறார். அவர் மீண்டும் ஒரு போட்டியாளராக மாற வாய்ப்பில்லை என்றாலும் இருக்கும் சில நாட்களில் மீண்டும் சண்டையிழுக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அபிராமி மற்றும் மதுமிதாவுக்கு நிச்சயம் அவர் சிம்மசொப்பனமாக இருப்பார் என்றே கருதப்படுகிறது.

கஸ்தூரியின் புதுவரவால் பிக்பாஸ் வீட்டில் எந்தவித திருப்புமுனையும் ஏற்படாத நிலையில் வனிதாவின் செகண்ட் இன்னிங்ஸ் பிக்பாஸ் வீட்டை மேலும் பரபரப்பாக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.