பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே இப்போதைக்கு பிரச்சனை வருகிற மாதிரி தெரியவில்லை, அல்லது தாமதமாக பிரச்சனை வரும் என்பதை புரிந்து கொண்ட பிக்பாஸ், உடனடியாக பிரச்சனையை வரவழைக்க நேற்று மீரா மிதுனை உள்ளே அனுப்பினார். அவர் எதிர்பார்த்த மாதிரியே மீரா மிதுன் வீட்டின் உள்ளே நுழைந்த உடனே பிரச்சனைத்தீ பற்றி கொண்டது. இன்றைய முதல் புரமோ வீடியோவில் அந்த பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்ததும் தெரிந்தது.

இந்த நிலையில் அடுத்த புரமோ வீடியோவில் செண்டிமெண்டை பிழிந்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர். தங்களால் தாங்க முடியாத ஒருவரின் இழப்பை கூறுமாறு ஒவ்வொருவருக்கும் கூறப்பட அதனையடுத்து ரேஷ்மா கூறியபோது,

‘தான் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தபோது தன்னுடைய வயிற்றில் உள்ள குழந்தையின் இதயம் நின்றுவிட்டதாகவும் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதாகவும், அந்த குழந்தையின் இழப்பை தன்னால் மறக்கவே முடியவில்லை என்றும் அழுது கொண்டே கூறினார்.

மேலும் தன்னுடைய குழந்தையின் கல்லறை அமெரிக்காவில் இருப்பதால் தான் அடிக்கடி அமெரிக்கா சென்று அதற்கு அஞ்சலி செலுத்தி வருவதாகவும் அவர் கூறியது பிக்பாஸ் குடும்பத்தினர்களை சோகக்கடலில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சி பெண்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்றால் சண்டை, செண்டிமெண்ட் இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும் என்பதை பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் நன்றாக புரிந்து கொண்டது இந்த புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.