எதியோப்பியாவில் உள்ள ஓர் ஆண் குழந்தையை பிரசவித்த அரை மணி நேரத்துக்கு பின் மருத்துவமனை படுக்கையிலேயே தனது பரீட்சைகளை எழுதியுள்ளார்.

21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எதியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவம் நடப்பதற்கு முன்னரே பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ஜான் காரணமாக அவரது உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

கடந்த திங்கள் கிழமையன்று அவருக்கு தேர்வுகள் நடப்பதற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது பரீட்சைகளை எழுதினர்.

இது தொடர்பாக அல்மாஸ் டெரீஸ் தெரிவிக்கும் போது,

‘கர்ப்பிணியாக இருக்கும்போது படிப்பது ஒன்றும் பிரச்சனையாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு வரை நான் தேர்ச்சி பெற காத்திருக்க விரும்பவில்லை. எனக்கு பிரசவம் ஒன்றும் அவ்வளவு கடினமான இருக்கவில்லை ஆகையால் நான் அவசரமாக பரீட்சை எழுத உட்கார்ந்தேன் எனத்’ தெரிவித்துள்ளார்.

ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை திங்கள் கிழமையன்று மருத்துவமனையில் எழுதினர். அடுத்த இரண்டு நாள்களில் நடக்கும் தேர்வுகளை அவர் தேர்வு மையத்துக்குச் சென்று எழுதவுள்ளார்.