பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நாடாளுமன்றம் – புறக்கணிக்கவுள்ள ஐ.ம.சு.கூ.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றம் இல்லை என்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.