பிலிப்பைன்ஸ் மனைவியை பாலியல் அடிமையாக வைத்திருந்த இலங்கையர் கைது!

தனது பிலிப்பைன்ஸ் மனைவியை சைபர்செக்ஸ் அடிமையாக வைத்திருந்த இலங்கையர் ஒருவர் பிலிப்பைன்ஸின் தேசிய புலனாய்வுப் பிரிவினால் (என்.பி.ஐ) கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பும் வீடியோ காட்சியில் நடிக்கும்படி இந்த பெண் கட்டாயப்பட்டுத்தப்பட்டு வந்ததாகவும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களிற்காக அந்த காட்சிகள் காண்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த வீடியோக்களை வெளிநாட்டவர்களிற்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

தமது மகள் பாலியல் காட்சிக்காக நடிக்க வற்புறுத்தப்படுவதையடுத்து, யுவதியின் தாயார் என்.பி.ஐ யிடம் உதவிகோரியுள்ளார்.

வறுமை காரணமாக வேறு வழியின்றி ஆரம்பத்தில் இதற்கு சம்மதித்ததாக யுவதி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கையர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.