புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்க அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். வெளிநாடுகளில் அதிகளவு நாட்களைக் கழித்திருந்தார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச, புதிய அரசாங்கத்தில் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்படும் என்று கூறினார்.

புதிய அரசாங்கம் கிராமங்களை நோக்கிச் செல்வதிலேயே கவனம் செலுத்தும் என்றும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே பிரதானமாக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.