முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

தற்போதைய பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ, பதவி விலகலை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள நிலையில் அந்த இடத்துக்கு ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்படவுள்ளார் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

2013ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரை இராணுவத் தளபதியாக அவர் கடமையாற்றினார். இராணுவத்தின் 20வது தளபதியாக ஜெனரல் தயா ரத்நாயக்க பதவி வகித்தார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததும் சேவை நீடிப்பு வழங்கப்படாமல் ஏமாற்றத்துடன் இராணுவ சேவையிலிருந்து ஜெனரல் தயா ரத்னாயக்க ஓய்வு பெற்றார்.