புலிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பண்ணாகத்தில் அஞ்சலி

தமிழீழ விடுதலைப் புலிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தமிழ் அரசு கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் அஞ்சலி நிகழ்வு இன்று (14) காலை வலி மேற்கு பிரதேசசபை முன்றலில் ஆரம்பித்தது.

ஈ.சரவணபவன் எம்.பியின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில் மாவை சேனாதிராசா கலந்து கொண்டிருந்தார்.

தமிழ் மக்களிற்கு எதிராகவும், அமைப்பிற்கு எதிராகவும் நடந்து கொண்டதாக குறிப்பிட்டு 1989இல் அமிர்லிங்கத்திற்கு புலிகள் மரண்தண்டனை விதித்தனர். அப்போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் வெ.யோகேஸ்வரனும் உயிரிழந்திருந்தார். எனினும், தற்போதைய அஞ்சலி நிகழ்வு அழைப்பிதழ்களில் யோகேஸ்வரன் பற்றிய எந்த குறிப்பும் இல்லை. எனினும், புலிகளால் மரண்தண்டனை விதிக்கப்பட்ட அமிர்தலிங்கத்தை முன்னிறுத்தி அஞ்சலி நிகழ்வுகளை தமிழ் அரசு கட்சி ஆரம்பித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பட்ட வரையும், அமிர்தலிங்கத்தை பற்றி மூச்சுக்கூட விடாமல் இருந்த தமிழ் அரசுக்கட்சியினர் தற்போது அமிர்தலிங்கத்தின் அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துள்ளது.

அடுத்த தேர்தலில் வெற்றிபெற சிரமப்பட வேண்டியவர் என கருதப்படும் ஈ.சரவணபவனே அமர்தலிங்கத்தின் அஞ்சலி நிகழ்வை மீள ஏற்பாடு செய்வதில் முன்னணியில் உள்ளார். பன்ணாகம் பகுதியில் உள்ள அமிர்தலிங்கத்தின் ஆதரவாளர்களை குறிவைத்தே அவர் அமிர்தலிங்கத்தை மீள கையிலெடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்திய அமைதிப்படையினரால் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லையென குறிப்பிட்டு, இந்தியப்படைகளின் படுகொலைகளிற்கு வெள்ளையடிக்க முயன்றவரிற்கு அஞ்சலி நிகழ்வை தமிழ் தேசியம் பேசுபவர்கள் செய்வது பரவலான விமர்சனத்தை எழுப்பியுள்ளது. சமூக ஊடகங்களிலும் சரவணபவன், மாவை ஆகியோரை கடுமையான விமர்சித்து வருகிறார்கள்.

இன்றைய அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்ததன் மூலம், விடுதலைப் புலிகள் தவறான முடிவையே எடுத்தார்கள் என்ற செய்தியை இருவரும் வெளிப்படுத்துவதாக கருத முடிகிறது. இன்றைய நிகழ்வில் ஈ.பி.டி.பி அமைப்பின் சி.தவராசாவும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, அமிர்தலிங்கத்திற்கு நேற்று மாலை ரெலோவின் செயலாளர் சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் நேற்று அஞசலி செலுத்தியிருந்தனர்.