வவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8 மாத சிசுவொன்று கிணற்றில் வீசி
கொலை செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குழந்தையை உறங்கச் செய்துவிட்டு தாயார் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய
சந்தர்ப்பத்தில் குழந்தை காணாமற்போயுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து, குழந்தையை உறவினர்கள் தேடினார்கள். குழந்தை அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. ​பின்னர் குழந்தை நெடுங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது