பெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது!

தனியார் வகுப்பு ஒன்றிற்கு முன்பாக சந்தேகப்படும் விதமாக நடமாடிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து சோதனையிட்டபோது, அவர் பெண்களின் உள்ளாடைகள் 13 ஐ அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று கம்பளை நிதாஸ் மாவத்தையில் நடந்தது.

தனியார் வகுப்பிற்கு முன்பாக வித்தியாசமான தோற்றத்தில் ஒருவர் நடமாடியதை அவதானித்த மக்கள், அவரை பிடித்து சோதனையிட்டனர். பெண்களின் உ்ளாடைகள் 13, அரைக்காற்சட்டைகள் இரண்டு, முழுக்காற்சட்டைகள் இரண்டை அணிந்திருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், அவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

கம்பளை பொலிஸ் நிலையத்தில் அவர் விசாரணைக்குட்படுத்தியபொது, கெலிஓயாவை சேர்ந்த 35 வயது ஆசாமியே அவரென்பது தெரிய வந்தது. பின்னர் எச்சரிக்கப்பட்டு, அவரது மனைவியடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.