பெண்குரங்கை பாலியல் அடிமையாக பயன்படுத்திய கொடுமை-ஆபத்தான நிலையில் மீட்ட ஆர்வலர்கள்!

இந்தோனேசியாவில் போர்னியோ நகரில் பாமாயில் பண்ணை ஒன்று உள்ளது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலர் அருகிலுள்ள கிராமத்திற்கு செல்கின்றனர்.

அங்கு அழுக்கடைந்த பாய் ஒன்றில், சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் போனி என்ற உராங்குட்டான் வகை பெண் குரங்கு ஒன்று உள்ளது.

அதனால் தன்னை தற்காத்து கொள்ள முடியாத நிலையில் இருந்தது. அதன் உடலில் உள்ள முடிகள் மழிக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, நகைகள் அணிவிக்கப்பட்டு, வாசனை திரவியமும் பூசப்பட்டு இருந்துள்ளது.

அதன்பின்னர், இந்த குரங்கு தன்னை விட 2 மடங்கு அளவில் பெரிய மனிதர்களால் பணம் கொடுத்து கற்பழிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த தகவல் அறிந்து அதனை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போர்னியோ உராங்குட்டான் உயிர்காப்பு தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர். அதன் இயக்குநர் மிச்செல்லி கூறும்பொழுது, போனி செக்ஸ் அடிமையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. அது அதிக வலியுடன் இருந்துள்ளது. அது எப்படி பயந்து இருக்கும் என நினைக்கும்பொழுது, அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது என கூறினார்.

இதன் கதை சோகம் நிறைந்தது. தாயிடம் இருந்து குழந்தையாக இருந்த போனியை திருடி சென்று, 6 வயதில் இருந்து அதற்கு செக்ஸ் செயல்களில் ஈடுபட கற்று தந்துள்ளனர். அதற்கு அடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் அதன் முடியை மழித்துள்ளனர். பின்னர் அதனை காயமுடன் விட்டு விட்டனர். அதன் தோலில் எரிச்சல் ஏற்படும் வகையிலும், கொசுக்களால் கடிக்க விட்டும் வந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதனை மீட்பதற்கு ஆயுதமேந்திய 35 போலீசார் செல்ல வேண்டியிருந்தது. பணம் கொடுத்து அதனை பயன்படுத்தி வந்த கிராமத்தினரிடம் இருந்து வலுகட்டாயமுடன் அதனை மீட்டுள்ளனர். எங்களை துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களால் மிரட்டினர் என்று மீட்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியை தேசிலெட்ஸ் கூறினார்.

அதன்பின் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர கடுமையாக முயற்சித்து உள்ளனர். ஆண்களை கண்டாலே போனி அதிகம் அச்சப்பட்டு உள்ளது. இதனால் காட்டுக்குள் மற்ற பெண் குரங்குகளை அறிமுகப்படுத்தி அதன் அச்சம் போக்கப்பட்டு உள்ளது. அனைத்து விசயங்களையும் உடனே கற்று கொண்டது. இதன்பின்னர் மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பழக தொடங்கியுள்ளது.

உராங்குட்டான் மற்றும் பிற குரங்குகள் கருப்பு சந்தையில் கடத்தப்படுகிறது. இதில் லட்சக்கணக்கில் பணம் புரளுகிறது. குட்டியாக இருக்கும்பொழுது இதன் மதிப்பு அதிகம். இவற்றை வளர்ந்தபின் கட்டுப்படுத்த முடியாது என்பதனால் வளர்ப்பு பிராணிகளாக யாரும் பயன்படுத்துவதில்லை.