பெண்ணின் கண்ணில் உயிருடன் இருந்த 4 தேனீக்கள்

தைவானில் பெண்ணின் கண்ணில் இருந்த 4 தேனீக்களை வைத்தியர் நூதனமாக எடுத்து, அந்தப் பெண்ணின் கண்ணுக்கு எந்த பாதிப்பும் இன்றி காப்பாற்றியுள்ளார்.

நம்மை சுற்றி இருக்கும் பகுதிகளில் தூரமாகவே தேனீக்கள் பறந்தாலும் அச்சம் வராமல் இருந்ததில்லை. அருகிலுள்ள மரத்தினில் தேன் கூடுகளில் தேனீக்கள் பறந்தாலும் பார்க்காமல் ஒதுங்கி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தைவானில் ஹீ(29) எனும் பெண் கடந்த வாரம் தனது உறவினரின் கல்லறைக்கு சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது கண்களில் அரிப்பு மற்றும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கைகளை கொண்டு வழக்கம்போல கண்களை கசக்கியுள்ளார். தொடர்ந்து வலி ஏற்படவே கண்களை கழுவியுள்ளார். சரிவரவில்லை. மறுநாள் அருகிலுள்ள மருத்துவமனையை அணுகினார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

Taiwan Woman Finds Sweat Bees Living in Her Eye

When this woman went to the hospital for what she thought was an infection, doctors found 4 bees living in her eye and drinking her tears

Posted by NowThis on Wednesday, April 10, 2019

இது தொடர்பாக வைத்தியர் கூறுகையில்,
‘கண்களில் ஏதோ பூச்சியின் கால்கள் இருப்பது போல் இருந்தது. மைக்ரோஸ்கோப் மூலம் எடுத்துவிடலாம் என பார்த்தேன். அப்போது 4 தேனீக்கள் உள்ளே இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் மெதுவாக அவரது கருவிழிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி தேனீக்களை எடுத்தேன். அவை உயிருடன் இருந்தன. உலகிலேயே இது தான் முதல் நிகழ்வு என நினைக்கிறேன். இவை வியர்வை தேனீக்கள் ஆகும்’ என கூறினார்.

இதையடுத்து 5 நாள்;கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 80வீதம் பார்வை சரிசெய்யப்பட்டுள்ளது. பார்வையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவைத்தியர்கள் கூறியுள்ளனர்.