பேருந்தில் பெண் முன் நபர் செய்த அருவருப்பான செயல், பின்னர் நடந்தது என்ன?

வேலை முடித்து இரவு வீடு திரும்புவது தான் கடினமாக இருக்கிறது என்றால், பட்டப் பகலிலும் பெண்களுக்கு நம் நாட்டில் பாதுகாப்பு இல்லை. தோழனுடன் பயணிக்கும் போது அடித்துப் போட்டுவிட்டு கற்பழித்து கொலை செய்கிறார்கள், தனியாக வந்தால்.. கூட்டு பலாத்காரம் செய்து படம், வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார்கள். இருளில் தான் இப்படி என்றால், பகலில் கொஞ்சமும் கூச்சமும், அச்சமும் இன்றி பெண்கள் முன் சுய இன்பம் கண்டுத் தொல்லை செய்கிறார்கள்.

இப்படியான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு ஆண்மை / ஆண்குறி நீக்கும் தண்டனை அமலுக்கு வரும் வரையிலும் இப்படியான குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பே இல்லை என்று தான் எண்ண தோன்றுகிறது.

இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 29 நாள், மதியம் 1.30 மணியளவில் எம்.டி.சி பேருந்தில் நடந்ததுள்ளது. மதிய வேளை என்பதாலும், பேருந்தில் கூட்ட நெரிசல் பெரிதாக இல்லாததாலும், அந்த கொடூரமான ஆண், வெட்ட வெளிச்சத்தில் எந்த பயமும், கூச்சமும் இன்றி, பேருந்தில் பயணத்தில் வந்து இளம்பெண் முன்னிலையில் சுய இன்பம் கண்டிருக்கிறார்.


பேருந்தில் பயணித்த அந்த இளம்பெண், “நான் எப்போதும் போல கேளம்பாக்கம் – சோழிங்கநல்லூர் செல்லும் பி 19 பேருந்தில் ஏறினேன். எனக்கு ஜன்னல் அருகே சீட்டில் பயணிப்பது மிகவும் பிடித்தமானது. பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வெடிக்கப் பார்த்துக் கொண்டும், பாட்டுக் கொண்டே பயணித்து வந்தேன்.

என் இருக்கையின் எதிர்முனையில் ஜன்னல் அருகே இருக்கையில் அந்த நபர் எப்போது வந்து அமர்ந்தார், அவர் எங்கே ஏறினார் என்றெல்லாம் நான் கவனிக்கவே இல்லை. நான் எதற்சையாக திரும்பி பார்த்த போது, அந்த ஆண் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தேன். ஒரு பெண்ணாக இருப்பதால், இப்படியான பார்வையை நான் தினந்தோறும் கடந்து வருகிறேன். அதனால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

ஆனால், சற்று நேரம் கழித்து ஏதோ தவறாக நடப்பது போன்ற எண்ணம். திரும்பி பார்த்தால்… வெட்ட வெளிச்சத்தில் ஓடும் பேருந்தில் அந்த ஆண் மிக கேவலமான செயலில் ஈடுபட்டு வந்தார். எனக்கு அங்க என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று அறியாமல், அந்நபரின் செயலை வீடியோவாக பதிவு செய்தேன்.

அந்த செயலை கண்டத்தில் இருந்து பதட்டம் பற்றிக் கொண்டது. என்னால் எதுவும் செய்ய இயலாது நிலை. பயத்தில் பேருந்தின் முன் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். பேருந்தில் இருந்து இறங்கிய சில நொடிகளில் அந்த ஆண், மாயமாகிவிட்டார். சில நிமிடங்கள் கழித்து தான்., நான் அவனை சும்மா விட்டிருக்க கூடாது, கத்தி, திட்டி இருக்க வேண்டும், இல்லை கண்டக்டர் இடமாவது கூறி இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

பேருந்தில் பயணித்த அந்த இளம்பெண், நடந்த நிகழ்வை பாடகி சின்மயிடம் அனுப்ப, அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதை அப்டேட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வர, வர பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மிக கொடூரமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

மேலும் பாடகி சின்மயி, ” பொது இடங்களில் தங்களிடம் இப்படி சுய இன்பம் கண்டு அச்சுறுத்தும் வகையில் ஆண்கள் நடந்துக் கொள்கிறார்கள் என பல பெண்கள் எனக்கு செய்தி அனுப்பி இருக்கிறார்கள். சிலர், அந்த நிகழ்வுகளை போட்டோ / வீடியோ எடுத்து ஆதாரமாக வைக்கிறார்கள். ஆனால், அதை தாண்டி என்ன செய்ய முடியும், நான் எப்படி உதவ முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.