கேகாலை மாவட்ட யட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் உதவியை நாடியுள்ளனர்.

இதற்காக மாதிரி உருவப் படமொன்றையும் வெளியிட்டுள்ள யட்டியாந்தோட்டை பொலிஸார், சந்தேக நபரை அடையாளம் கண்டால் 036 2270224 என்ற யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.