ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ள நிலையில் தற்போது அவர் ‘ஜாக்பாட்’ மற்றும் கார்த்தியுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இன்னொரு படத்திலும் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், என்ற செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்டப் பணிகளில் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்க இருப்பதாக செய்திகள் வந்தன.

இதன்படி சற்றுமுன்னர் இந்த படத்தின் டைட்டில் ‘பொன்மகள் வந்தாள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுடன் அட்டகாசமான டைட்டில் பார்வையும் சூர்யாவின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளிவந்துள்ளது. கோவிந்த் வசந்த் இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ஜே.ஜே.பெட்ரிக் இயக்கவுள்ளார்.