மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தனக்குத் தொடர்பு உள்ளது எனத் தெரிவித்து முன்னாள் போராளி ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது-48) என்பவரே சரணடைந்தார்.

‘தானாக குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் இன்று காலை பொலிஸ் சரணடைந்தார். அவரிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னரே தகவல் வெளியிட முடியும். சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்’ என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.