போத்தல் மூடி சலஞ்சில் அசத்திய நகுல்! (VIDEO)

கடந்த சில நாள்களாகவே உலகம் முழுவதிலும் உள்ள திரை நட்சத்திரங்களால் போத்தல் மூடி சலஞ்ச் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஹோலிவுட் நடிகர்களான ஜேசன் ஸ்டாதம் போலிவுட் நட்சத்திரங்களான அக்சயகுமார், சுஷ்மிதா சென் உள்ளிட்டவர்களும் போத்தல் மூடி சலஞ்சில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோக்களும் வைரலாகியது.

இந்த நிலையில் கோலிவுட்டின் அக்சன்கிங் அர்ஜூனும் இந்த போத்தல் மூடி சலஞ்சில் கலந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது நடிகர் நகுல் தனது சமூக வலைத்தள பக்கத்தில், தான் போத்தல் மூடி சலஞ்சில் ஈடுபட்ட வீடியோவை பதிவு செய்துள்ளார்,. இந்த வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்பட ஒருசில கோலிவுட் பிரபலங்கள் போத்தல் மூடி சலஞ்சை விளையாட்டாக எடுத்து கொண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.