டோனி தற்போது ஓய்வில் தன் குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகிறார். அப்போது தன் மகள் கேரட் ஊட்டிய காட்சியை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தோனி.

தோனி கடந்த இரண்டு ரி-20 தொடர்களில் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஒருநாள் போட்டி அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். 2019 உலகக்கிண்ணம் வரை டோனி கிரிக்கெட் ஆடுவார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டோனி தன் நேரத்தைக் குடும்பத்தினருடனும், விளம்பர நிகழ்ச்சிகளிலும் செலவிட்டு வருகிறார். தன் சுட்டி மகள் ஸீவா செய்யும் குறும்புத்தனங்களை அவ்வப்போது வீடியோ எடுத்து பகிர்வார் டோனி.

தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவில் ஸீவா நீளமான கேரட் ஒன்றை தோனிக்கு ஊட்டுகிறார். தோனி அதை முயல் போல எக்கி வந்து கடிக்கிறார். இந்த வீடியோ பதிவில், “Ziva’s Bugs Bunny” என குறிப்பிட்டுள்ளார் தோனி. Bugs Bunny கார்ட்டூனில் வரும் ஒரு முயல் கதாபாத்திரம் ஆகும்.

 

View this post on Instagram

Ziva’s bugs bunny @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on