இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படம் என்று கூட சொல்லலாம் அப்படிப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன். பல வருடங்களாக இந்த கதையை எடுக்க நினைத்தவருக்கு சரியான நடிகர்களின் கால்ஷீட் கிடைக்கவில்லை.

முன்னணி நடிகர்கள் அஜித், விஜய் எல்லாம் பொன்னியின் செல்வம் படத்தில் நடிக்கவுள்ளனர் என்ற பேச்சு எழுந்தது. கடைசியில் விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து படமாக்கவிருந்தார்.

ஆனால் இதிலும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் இடிக்க கார்த்தி தற்போது இந்த படத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்தில் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

2.0 படத்தைத் தொடர்ந்து இப்படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது லைகா நிறுவனம்.