மது போதையில் மோட்டார் வாகனத்தை செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் தனித்தனியாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது குடிபோதையில் மோட்டார் வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபா வீதம் 50 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் மூன்று மாதத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரமும் தடுத்து வைக்கப்பட்டது.

குடிபோதையிலும், அனுமதிப்பத்திரமின்றியும் மோட்டார் வாகனம் செலுத்திய மற்றைய நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

மது போதையில் மோட்டார் வாகனம் செலுத்திய மூவருக்குச் சாவகச்சேரி நீதிமன்றில் ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.