மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றைய தினம் 109ஆவது நாளாக மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அகழ்வு பணிகளை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் அவரோடு இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வரும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன.

அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதியில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.